மதம் குறித்து பேசமாட்டேன் மன்னித்து விடுங்கள் என்று கூறினாரா விஜய் சேதுபதி?

நடிகர் விஜய் சேதுபதி சபரிமலை விஷயத்தில் மாதவிலக்கு புனிதமானது, சபரிமலை பிரச்சினையில் நான் கேரள முதல்வர் பினராயி விஜயன் பக்கம் நிற்கிறேன் என்று கூறியது சர்ச்சைக்கு உள்ளானது. இதனை தொடர்ந்து விஜய் சேதுபதி பகவத் கீதையை இழிவு படுத்தி பேசியதாக பலரும் ஒரு செய்தியை பரப்பி வந்தனர். இது குறித்த சர்ச்சைக்கு அப்படி எதுவும் கூறவில்லை என்று விஜய் சேதுபதி விளக்கமளித்துள்ள நிலையில், அதையும் சில பேஸ்புக் பக்கங்கள் அவர் மன்னிப்பு கேட்டதாக திரித்து வெளியிட்டு வருகின்றன.

tnnews24.com தள செய்தியின் சில வரிகள்:

மெய்ப்பொருள்:

பகவத் கீதை குறித்து பலரும் பேஸ்புக்கில் பகிர்ந்த செய்தியை தான் கூறவில்லை என்று மறுப்பு தெரிவித்த விஜய் சேதுபதி “பகவத்கீதை மட்டுமல்ல எந்த ஒரு புனிதநூலை பற்றியும் எப்பொழுதும் நான் அவதூறாக பேசியதும் இல்லை பேசவும் மாட்டேன். சில சமூகவிரோதிகள் பரப்பிய அவதூறான செய்தி இது. எந்த சூழ்நிலையிலும் என் மக்களின் நம்பிக்கையும் ஒற்றுமையும் குலைக்குமாறு நான் நடந்து கொள்ளவே மாட்டேன்” என்று தான் தெரிவித்து இருக்கிறார்.

இது குறித்து விஜய் சேதுபதி வெளியிட்ட ட்வீட்:

சபரிமலை குறித்து பேசும் போதும் இந்து மதத்தை பற்றி தவறாக கூறாத விஜய் சேதுபதியை, தவறாக கூறியதற்கு மன்னிப்பு கேட்டார் என்று பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளது tnnews24.com தளம்.