மோடி ஆட்சியில் சுத்தமான கங்கை நீரை குடித்தாரா பிரியங்கா காந்தி?

காங்கிரஸ் ஆட்சியில் அசுத்தமாக இருந்த கங்கை நீரை மோடி ஆட்சிக்கு வந்த பிறகு சுத்தப்படுத்தி விட்டதாகவும் அந்த சுத்தமான கங்கையில் தான் ‘கங்கை யாத்திரை’யின் போது பிரியங்கா காந்தி குடித்தார் என்று பாஜக ஆதரவாளர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

மெய்ப்பொருள்:

மேலே கங்கையைக் காட்டும் 2 புகைப்படங்களுமே மோடி ஆட்சிக்கு முன்னரே எடுக்கப்பட்டதாகும். முதலில் அழுக்காகக் குப்பைகளோடு காணப்படும் கங்கை 2009இல் பனாரஸில் எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.

அடுத்ததாகக் கீழே சுத்தமானதாகக் காட்டப்பட்டுள்ள கங்கையின் புகைப்படம் 2012ஆம் ஆண்டு Jodi Surfas என்ற வெளிநாட்டுப் பெண்மணியால் ரிஷிகேஷில் எடுக்கப்பட்டது. அதில் பிரியங்கா தற்போது கங்கை நீரை அலகாபாத்தில்(பிரயாக்ராஜ்) குடித்த புகைப்படத்தை ஃபோட்டோஷாப் போன்ற மென்பொருள் உதவியுடன் சேர்த்துப் பகிர்ந்து வருகின்றனர்.

ரிஷிகேஷில் 2012இல் எடுக்கப்பட்ட புகைப்படம்:

ப்ரியங்கா காந்தி கங்கையில் நீர் அருந்தும் புகைப்படம்:

இதில் மூன்றாவது மட்டுமே மோடி ஆட்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

வெவ்வேறு காலகட்டங்களில், குறிப்பாக மோடி ஆட்சியில் எடுக்கப்படாத இரண்டு புகைப்படங்களை ஹைலைட் செய்து கங்கை நீர் காங்கிரஸ் ஆட்சியில் அசுத்தமாக இருந்ததாகவும், இந்த ஆட்சியில் சுத்தப்படுத்தப்பட்டுள்ளது என்றும் பகிர்ந்து வருகின்றனர் பாஜக ஆதரவாளர்கள்.

Sources:

Indian scavengers look for coins and other valuable items from among

Learning Lâcher prise: Rishikesh, India

Priyanka Gandhi drinks Ganga river water | English Version – 19th image