மொபைல் கதிர்வீச்சால் மக்காச்சோளம் பாப்கார்ன் ஆகுமா?

நாம் பயன்படுத்தும் மொபைல் கதிர்வீச்சால் மக்காச்சோளம் பாப்கார்ன் ஆவதாக வாட்ஸ்-அப்பில் பலருக்கும் மெசேஜ் ஒன்று ஒரு வீடியோ உடன் ஆங்கிலத்தில் கீழே உள்ளது போல வந்திருக்கும்.

Corn becomes popcorn due to mobile phone radiation. Would you still keep it below or beside your pillow when sleeping. This is the proof which is telling us where we are going with technology. Must see

ஆனால் உண்மை என்ன?

மெய்ப்பொருள்:

இந்த வதந்தியில் வந்திருக்கும் வீடியோ 2008 YouTube தளத்தில் Pop corn with cell phones என்ற தலைப்புடன் அப்லோட் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு நடக்க வாய்ப்பே இல்லையென்று அதே ஆண்டில் Wired எனும் ஆங்கில தளத்தில் ஒரு இயற்பியல் பேராசிரியர் விளக்கி உள்ளார்.

“How Everything Works: Making Physics Out of the Ordinary” என்ற புத்தகத்தை எழுதி உள்ள Louis Bloomfield என்ற அந்த இயற்பியல் பேராசிரியர், “மக்கா சோளத்தை மைக்ரோவேவ் ஓவனில் சூடாக்கும் போது அதன் உள்ளே இருக்கும் நீர் சூடாகி ஆவியாகும். உள்ளே அழுத்தம் அதிகமாகும் போது மக்காச்சோளம் பாப்கார்ன் ஆகும். மொபைல் போன்கள் அந்தளவிற்கு சூட்டை உருவாக்கினால் அதை பயன்படுத்துபவர் கையை பயங்கரமாக  காயப்படுத்தும்” என்று கூறியுள்ளார்.

அத்தோடு மொபைல் போனுக்கு கால் வரும் போது அது சிக்னலை பெறுகிறது, வெளியிடவில்லை. மிக அதிகமான சத்தத்தில் இவ்வாறு நடக்க வாய்ப்பிருந்தாலும் மொபைல் போன்கள் உருவாக்கும் சத்தம் ரொம்பவே குறைவானது என்றும் கூறியுள்ளார்.

அப்படியென்றால் வீடியோவில் மக்காச்சோளம் எப்படி பாப்கார்ன் ஆகி இருக்கும்?

வீடியோ எடிட்டிங்க் மூலமாகவோ அல்லது மேசைக்கு கீழே சூடாக்கும் ஏதேனும் பொருள் இருந்திருக்கலாம். இந்த தகவலை Snopes.com என்ற தளமும் உறுதி செய்துள்ளது. அத்தோடு இது மொபைல் கதிர்வீச்சின் மூலம் முட்டையே வெந்துவிடும் என்ற பொய் செய்திக்கும் பொருந்தும்.

Sources:

Physicist Debunks Cellphone Popcorn Viral Videos | WIRED

Cooking Eggs or Popcorn with Cell Phones