பியூஷ் மானுஷ் மனைவி விவாகரத்துக்கான காரணம் என்று சொல்லி ஆடியோ வெளியிட்டாரா?

சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ் அவர்களின் மனைவி பியூஷ் மானுஷை விவாகரத்து செய்வதாக ஒரு ஆடியோ ஒன்று வீடியோ வடிவில் பேஸ்புக், வாட்ஸ்-அப்பில் பரவி வருகிறது. அதில் பியூஷ் மானுஷ் குறித்து அவரது மனைவி பேசுவதாக உள்ளது. இந்து மக்கள் கட்சியின் அர்ஜுன் சம்பத் உட்பட பலரும் இதை பேஸ்புக் பகிர்ந்துள்ளார்கள்.

மெய்ப்பொருள்:

இது குறித்து பியூஷ் மானுஷ் தனது பேஸ்புக் போஸ்ட் ஒன்றில் இது பொய்யான ஆடியோ என்று தெரிவித்துள்ளார். அது கீழே.

அப்படியானால் ஆடியோவில் இருப்பது யார் பேசியது?

ஆடியோவில் பேசி இருப்பவர் சின்னத்திரை நடிகை நிலானி. காந்தி லலித்குமார் என்பவர் இறந்த பிறகு அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் இருந்து சில பகுதிகள் எடுக்கப்பட்டு இந்த பொய்யான ஆடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

கீழே இருக்கும் வீடியோவில் 2.58, 11:00 ஆவது நிமிடங்களில் நிலானி பேசியிருப்பதை பார்க்கலாம்.