இந்திய ரூபாய் அச்சடிக்கும் இயந்திரங்களை பா.சிதம்பரம் பாகிஸ்தானுக்கு விற்றாரா?

முன்னாள் மத்திய அமைச்சர் பா. சிதம்பரம் அவர்கள் இந்திய ரூபாய் அச்சடிக்கும் இயந்திரங்களை பாகிஸ்தானுக்கு விற்றதாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராஜன் குற்றம் சாட்டி இருப்பதாக பேஸ்புக்கில் செய்திகள் பரவி வருகிறது.

மெய்ப்பொருள்:

இது குறித்தான செய்தி ஏதேனும் வந்திருக்கிறதா என நாம் இணையத்தில் தேடிய போது அவ்வாறான எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. முன்னாள் நிதி மற்றும் உள்துறை அமைச்சராக இருந்த ஒருவர் இவ்வாறான பேட்டியை கொடுத்து இருந்தால் இந்திய மீடியாக்கள் சும்மா விட்டிருப்பார்களா? அத்தோடு புகார் கூறி இருப்பவர் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் என்றும் சொல்லும் போது எவ்வளவு பெரிய பரபரப்பான செய்தி ஆகியிருக்கும் என்பதையும் நாம் யோசிக்க வேண்டும்.

சாதாரணமாக கூகுளில் தேடினாலே பொய்யென்று தெரிய போகிற ஒரு விசயத்தை கூட நிறைய பேர் பகிர்வதை இணையத்தில் பகிர்வதை நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கிறது.