இந்தியாவிலிருந்து வெளியேற காங்கிரஸுக்கு 562 கோடி கொடுத்தாரா நீரவ் மோடி?

லண்டனில் கைது செய்யப்பட்ட நீரவ் மோடி அங்கிருக்கும் நீதிமன்றத்தில் காங்கிரஸுக்கு 562 கோடி ரூபாய் கொடுத்த பின்னர் அவர்கள் தான் இந்தியாவிலிருந்து வழியனுப்பி வைத்தார் என வாக்குமூலம் கொடுத்ததாக Bjp Coimbatore Thondamuthur Assembly என்ற பேஸ்புக் பக்கம் பகிர்ந்துள்ளது. இந்த போஸ்ட்டை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

மெய்ப்பொருள்:

நீரவ் மோடி காங்கிரஸுக்கு 562 கோடி கொடுத்த பின்னர் அவர்கள் தான் இந்தியாவிலிருந்து வழியனுப்பி வைத்தார் என வாக்குமூலம் கொடுத்ததாகக் கூறி இருப்பது பொய்யான செய்தியாகும்.

பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி வழக்கில் நீண்ட மாதங்களுக்குப் பிறகு கடந்த மார்ச் 20ஆம் தேதி நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டார். முதலில் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் மறுபடியும் 29ஆம் தேதி மறு விசாரணைக்கு வந்தது. அப்போது நீரவ் மோடி தரப்பில் அவர் லண்டனில் தனியாகத்தான் வசித்து வருகிறார். அவரின் மகன் அமெரிக்காவில் உள்ளார் என்பது உட்பட சில விசயங்களைக் குறிப்பிட்டு வாதிட்டு அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கக்கோரினர்.

வழக்கு ஆரம்பக்கட்டத்தில் இருப்பதால் எந்த முடிவுக்கும் வர முடியாது என்று கூறி ஜாமீன் மனுவை லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது தான் அனைத்து பத்திரிக்கைகளிலும் வெளியாகிய செய்தியும் கூட. இந்த விசாரணையின் போது காங்கிரஸ் குறித்து நீரவ் மோடி எந்த வாக்கு மூலமும் கொடுக்கவில்லை. இந்த சூழ்நிலையில் நாட்டை விட்டுத் தப்பிக்க 562 கோடி காங்கிரஸுக்கு அவர் கொடுத்தார் என்று பொய்யான செய்தி தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது.

Source:

நீரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு

Nirav Modi to stay in jail as London court denies bail