நியூசிலாந்து மசூதி தாக்குதல் குற்றவாளியை மற்ற சிறை கைதிகள் தாக்கினார்களா?

நியூசிலாந்து பள்ளிவாசலில் தொழுகையின் போது சுட்டுக் கொன்றவனை ஜெயிலில் உள்ள சக கைதிகளே துவைத்து எடுக்கும் அற்புத காட்சி.! என்று ஒரு காணொளி பேஸ்புக்கில் Mohamed Arshath என்ற நபரால் அப்லோட் செய்யப்பட்டு பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

மெய்ப்பொருள்:

காணொளியில் கைதிகளால் தாக்கப்படும் நபர் நியூசிலாந்து மசூதி தாக்குதல் குற்றவாளி அல்ல.

நியூசிலாந்து மசூதி தாக்குதல் நடந்தது மார்ச் 15, 2019 ஆனால் பகிரப்பட்டிருக்கும் காணொளியில் இருக்கும் சம்பவம் கனடாவில் உள்ள ஒரு சிறையில் 2015ஆம் ஆண்டு நிகழ்ந்ததாகும். காணொளியில் Carlos Larmond என்ற கைதியை சக கைதிகள் தாக்குகிறார்கள். இந்த செய்தி Canadian Broadcasting Corporation தளத்தில் செப்டம்பர் 10, 2015 அன்று வெளியாகியுள்ளது. அதன் காணொளியைக் கீழே காணலாம்.

Source: Carlos Larmond tried to convert beating accused to Islam, lawyer says