மோடியின் இந்த கார்ட்டூன் டைம் இதழில் அட்டைப்படமாக வந்ததா?

அமெரிக்காவின் டைம் நாளிதழ் மோடியின் கீழ்க்கண்ட கார்ட்டூனை அட்டைப்படத்தில் வெளியிட்டதாக “New York Times Magazine. What Foreign Media Institutions think about Indian Media.” என்று குறிப்பிட்டு நிறையப் பேர் பகிர்ந்து வருகின்றனர்.

மெய்ப்பொருள்:

2012 ஆம் ஆண்டு மே மாதம், ஒரு பெண் குழந்தைக்குப் பால் கொடுப்பது போல David Horsey என்பவர் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸுக்காக வரைந்த கார்ட்டூனில் முகத்தை மட்டும் மாற்றி இப்போதும் கூட நிறையப் பேர் பகிர்ந்து வருகின்றனர். கீழே உள்ளது தான் உண்மையான கார்ட்டூன்.

இரண்டிலுமே David Horseyயின் கையெழுத்து இருப்பதைக் காணலாம். மோடியின் முகத்தோடு இருக்கும் பொய்யான கார்ட்டூனில் @_MiteshPatel என்ற ட்விட்டர் அக்கவுண்ட் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த அக்கவுண்ட் தற்போது ̀சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.

இந்த பொய்யான கார்ட்டூனை வெளியிட்டதற்காக @_MiteshPatel மீது கர்நாடக பாஜக ஐடி செல் 2017இல் FIR பதிவு செய்துள்ளது. இந்த செய்தி TheNewsMinute தளத்தில் வெளியாகியுள்ளது.

Sources:

Republican Party suckles at the breast of Big Business

Gujarat man tweets “vulgar” cartoons of PM Modi, BJP files complaints across the country