மனைவியின் பேச்சை தவிர்க்க 62 ஆண்டுகளாக காது கேட்க மற்றும் பேச முடியாதவராக நடித்தாரா கணவர்?

தனது மனைவியின் பேச்சை தவிர்ப்பதற்கான அமெரிக்காவின் Waterbury நகரை சேர்ந்த ஒரு நபர் 62 ஆண்டுகளாக காது கேட்க, பேச முடியாதவராக நடித்தார் என்றும், உண்மையை அறிந்த மனைவி அவரை விவாகரத்து செய்ய போவதாகவும் செய்திகள் பேஸ்புக்கில் பகிரப்பட்டது.

மெய்ப்பொருள்:

மார்ச் 2019 தொடக்கத்தில் பேஸ்புக்கில் பெரும்பாலானவர்களால் பகிரப்பட்ட இந்த செய்தி முதலில் World News Daily Report (WNDR) என்ற இணையதளத்தில் எழுதப்பட்டிருந்தது. அந்த தளத்தின் செய்தியில் குறிப்பிட்ட நபரின் மனைவி, தனது கணவர் பார் ஒன்றில் பாடிய பாடலை யூட்யூப் தளத்தில் பார்த்த பிறகு உண்மையை அறிந்ததாக எழுதப்பட்டிருந்தது.

இந்த செய்தியினை பகிர்ந்த World News Daily Report தளத்தின் பிண்ணனியை பார்த்த போது அதில் இது போன்ற செய்திகளை நையாண்டிக்காக உருவாக்கி எழுதுகிறார்கள் என்று அறிய முடிந்தது. இது அந்த தளத்தின் கீழ்ப்பகுயிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

நகைச்சுவைக்காக ஒரு தளத்தில் எழுதப்பட்ட பதிவை பலரும் உண்மையென்று நினைத்து பகிர்ந்து விட்டனர்.

Source:

Did a Man Fake Being Deaf and Dumb for 62 Years to Avoid Listening to His Wife?

MAN FAKED BEING DEAF AND DUMB FOR 62 YEARS TO AVOID LISTENING TO HIS WIFE