மேக்-இன் இந்தியா திட்டம் மூலம் உருவாக்கப்பட்ட ரயில் ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதா?

மோடி ஆட்சியில் மேக்-இன் இந்தியா திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இரயில் ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக பேஸ்புக்கில் ஒரு விமானத்திற்குள் இருந்து மெட்ரோ ரயில் கோச் ஒன்று வெளியே கொண்டு வரப்படும் புகைப்படம் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

மெய்ப்பொருள்:

புகைப்படத்தில் இருப்பது Antonov என்ற உக்ரைன் நிறுவன விமானத்தில் ஒரு ரயிலின் கோச் இருக்கும் காட்சி. இது இணையத்தில் கிட்டதட்ட 2008 ஆம் ஆண்டில் இருந்தே இருக்கிறது. கீழே இருப்பது தான் உண்மையான புகைப்படம்.

குறிப்பாக படத்தில் வாட்டர்மார்க் ஆக உள்ள சீன மொழி ஆகும். அதை பேஸ்புக்கில் நீக்கிவிட்டு பகிர்கிறார்கள்.

ஆனால் அதே சமயத்தில் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு மெட்ரோ ரயில்கள் கொண்டு செல்லப்பட்டிருப்பதும் உண்மைதான். ஆனால் அவை பிரதமர் மோடி தொடங்கி வைத்த மேக்-இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கப்பட்ட ரயில்கள் இல்லை.

Bombardier என்ற நிறுவனம் 2012ஆம் ஆண்டே ஆஸ்திரேலியாவுக்கு மின்சார ரயில்களை ஏற்றுமதி செய்யும் உரிமையை பெற்றுள்ளது. இந்தியாவில் இதன் கிளை குஜராத்தில் வடோதரா நகருக்கு அருகே உள்ளது. கனடாவை சேர்ந்த இந்த நிறுவனம் 2008 ஆம் ஆண்டு முதலே இந்தியாவிலிருந்து இயங்கி வருகிறது. 2012 ஆம் ஆண்டு பெற்ற ஏற்றுமதி உரிமத்தின் படி 2016ஆம் ஆண்டு ரயில் பெட்டிகள் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டன.

பிரதமர் மோடி மேக்-இன் இந்தியா தொடங்கி வைத்தது 25 செப்டம்பர் 2014 ஆகும். இந்த ரயில் பெட்டிகள் இந்தியாவில் உருவாக்கப்பட்டவை என்றாலும் மேக்-இன் இந்தியா திட்டத்தில் உருவானவை அல்ல.

Sources:

pics_firstlouis_1210907892.jpg (629×444) via Antonov An-124 – Rental price

Bombardier setting up metro coach factory in Vadodara

Bombardier bags Australian deal; to export bogies from Gujarat facility

‘Made in India’ metro coaches in Australia!

Is Modi’s “Make in India” responsible for the export of metro coaches to Australia?