கும்பகோணம் ராமலிங்கம் கொலைக்கு தொழில் முன் விரோதம் காரணமா?

கும்பகோணத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் மதமாற்றம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் கொல்லப்பட்டார் என்று நேற்று செய்திகள் வந்த நிலையில் இன்று சிலர் அவர் தொழில் முன்விரோதம் காரணமாகத்தான் கொல்லப்பட்டார், அதை தொடர்ந்து இருவர் கைது என்ற செய்தியை சிலர் பகிர்ந்து வருகின்றனர்.

மெய்ப்பொருள்:

கும்பகோணம் ராமலிங்கம் கொலைக்கு தொழில் முன் விரோதம் தான் காரணம் என்று News7 தொலைக்காட்சி எந்த செய்தியையும் வெளியிடவில்லை.

கும்பகோணம் ராமலிங்கம் கொலை வழக்கில் திருபுவனம் பகுதியை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் கொல்லப்பட்டதிற்கான காரணம் என்னவென்று இதுவரை போலிஸ் தரப்பில் இருந்து எதுவும் அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிடப்படவில்லை.

கைது செய்யப்பட்டவர்கள்:

1) சர்புத்தீன், த/பெ யாக்கூப் வயது 60
2) முகம்மது ரிஸ்வான், த/பெ மந்திர் அலி, வயது 23
3) முகம்மது ரியாஸ், த/பெ ஹாஜா பக்ருத்தீன், வயது 27
4) நிஜாம் அலி, த/பெ சர்தார் கான், வயது 33
5) அஸாருத்தீன், த/பெ அப்துல் கலாம், வயது 26