மோடி-அமித்ஷா மறுபடி ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தான் இல்லாமல் ஆகிவிடும் என்று கூறினாரா அர்விந்த் கெஜ்ரிவால்?

கடந்த ஜனவரி 19ஆம் தேதி கொல்கத்தாவில் எதிர்கட்சியினர் நடத்திய மாநாட்டில் பேசிய அர்விந்த் கெஜ்ரிவால் மோடி-அமித்ஷா மறுபடி ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தால் இல்லாமல் ஆகிவிடும் என்று கூறியதாக ஒரு வீடியோ பரவி வருகிறது. இந்தியில் அவர் பேசியிருக்கும் வீடியோ உண்மையானதா?

வீடியோவில் இருப்பது: “मैं जितना सोचता हु उतना मेरा शरीर कांप उठता है। अगर ये दोनो दोबारा 2019 में आ गये, अगर मोदी और अमित शाह 2019 में आ गये तो दोस्तो ये पाकिस्तान नही बचेगा, ये पाकिस्तान को बर्बाद कर देंगे। ( It sends shivers down my spine to think that if these two come back to power in 2019, if Modi and Amit Shah are re-elected in 2019, then friends, Pakistan won’t survive. They will ruin Pakistan. -translated)

தமிழில்: மோடி-அமித்ஷா மறுபடி 2019இல் ஆட்சிக்கு வந்தால, நண்பர்களே பாகிஸ்தான் என்றே நாடே இருக்காது. அவர்கள் பாகிஸ்தானை அழித்து விடுவார்கள்.

மெய்ப்பொருள்:

இது குறித்து Altnews வெளியிட்டுள்ள செய்தியில் இதன் உண்மையான வீடியோவின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியா டுடே தனது ட்விட்டர் கணக்கில் பகிர்ந்திருக்கும் அந்த வீடியோவின் 4.26ஆவது நிமிடத்தில் பாகிஸ்தான் குறித்து பேசத்துவங்குகிறார் அர்விந்த் கெஜ்ரிவால்.

அதன் சுருக்கம்: “கடந்த 70 வருடங்களாக இந்தியாவை பிரிக்க வேண்டும் என்பது தான் பாகிஸ்தானின் கனவாக உள்ளது. 70 வருடங்களாக பாகிஸ்தானால் செய்ய முடியாததை ஆட்சிக்கு வந்த 5 ஆண்டுகளில் செய்து காட்டியுள்ளனர் மோடியும் அமித்ஷாவும். இந்துக்களை முஸ்லீம்களுக்கு எதிராகவும், முஸ்லீம்களை கிறித்துவர்களுக்கு எதிராகவும் தூண்டிவிட்டு ஒவ்வொருவருக்குள்ளும் பகைமையை 5 ஆண்டுகளில் உருவாக்கியுள்ளனர் இருவரும். இவர்கள் இருவரும் மறுபடி ஆட்சிக்கு வந்தால் இந்தியா தாங்காது. அவர்கள் இந்த நாட்டையே அழித்து விடுவார்கள்.”

ஆங்கிலத்தில்: ” For the last 70 years, since the country got its independence, many forces have tried their best to weaken this country. In the last 70 years, Pakistan’s dream has been to split this country somehow and divide this country. Within five years, Modi and Amit Shah have done to the country what Pakistan hasn’t been able to do in 70 years. Within five years, Modi and Amit Shah have injected poison inside the people of this country. Pitting Hindus against the Muslims, Muslims against Christians, creating enmity amongst each other. What Pakistan could not do in 70 years, that has been done by Modi and Amit Shah within five years. Friends, this pair will ruin this country. It sends shivers down my spine to think that if these two come back to power in 2019, if Modi and Amit Shah are re-elected in 2019, then friends this country won’t survive. They will ruin this country.-translated”

அர்விந்த் கெஜ்ரிவால் பேசிய வீடியோவில் இந்தியாவை அழித்து விடுவார்கள் என்பதை எடிட் செய்து பாகிஸ்தானை அழித்து விடுவார்கள் என்று மாற்றி இருக்கிறார்கள். வீடியோவின் உண்மைத்தன்மையை அறியாமல் பலரும் இதை பகிர்ந்து வருகிறார்கள்.

Sources:

Doctored video: No, Arvind Kejriwal did not claim that Modi-Amit Shah will ruin Pakistan if voted back to power

India Today tweet