கிராம சபை கூட்டத்தில் கனிமொழிக்கு எதிராக மக்கள் கொந்தளித்தார்களா?̀

கனிமொழி கோவில்பட்டியில் நடத்திய கிராம சபை கூட்டத்தில் கலைஞர் அவர்கள் இலவச கல்வி கொடுத்தார் என்று கூறிய போது நாங்கள் யாரும் அப்படி வாங்கியது கிடையாது என்று மக்கள் கொந்தளித்தாக பேஸ்புக்கில் பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.

மெய்ப்பொருள்:

NewsJ பேஸ்புக்கில் பகிரப்பட்டு இருக்கும் வீடியோவைத்தான் மற்ற பக்கங்கள் வேறு அர்த்தத்தில் பகிர்ந்து வருகிறார்கள். இரண்டிலும் எந்த மாற்றமும் இல்லை.

வீடியோவில் கலைஞர் அவர்கள் கல்லூரி கல்வி இலவசம் என்று திட்டம் கொண்டு வந்தார், உங்களுக்கு எப்படி ஸ்காலர்ஷிப் கிடைக்காமல் போகிறது என்று தெரியவில்லை என்று ஒரு நபரிடம் கூறுகிறார். இத்துடன் இந்த பகுதி முடிகிறது. அடுத்ததாக ஒரு நபர் பஞ்சாயத்து க்ளார்க் பாலமுருகன் என்பவர் லஞ்சம் வாங்கிறார் என்று புகார் தெரிவிக்கிறார். அதனைத் தொடர்ந்து ஒரு நபர் (பாலமுருகனாக இருக்கலாம்) நான் யார்கிட்டயும் அப்படி வாங்கியது கிடையாது. அப்படி ஆதாரப்பூர்வமாக யாராவது சொன்னால் நான் அதற்கு கட்டுப்படுகிறேன் என்று கூறுகிறார். அதன் பிறகு தான் வாக்குவாதம் தொடங்குகிறது. கூட்டத்தில் இருக்கும் ஒரு பெண் ஏதோ பேச முயல சிலர் அவரை கட்டுப்படுத்த முயல்கிறார்கள். அதனை தொடர்ந்து எல்லோரையும் அமைதியாக இருக்கச் சொல்லும் கனிமொழி, குற்றம் சாட்டப்பட்ட நபர் தன் மீதான குற்றத்திற்கு பதில் கூறுகிறார். அதனால் இரண்டு பக்கமும் இருக்கும் நியாயத்தை கேட்டு முடிவு செய்ய வேண்டும் என கூறுகிறார். இந்த பகுதியினை பார்த்தால் தெளிவாக புரியும் மக்கள், கனிமொழி இலவச கல்வி குறித்து கூறியதற்கோ அல்லது அவருடனோ வாக்குவாதம் செய்யவில்லையென்று.

NewsJ வீடியோ கீழே.

வீடியோவை முழுமையாக பார்த்தாலே என்ன பிரச்சினை என்பது தெளிவாக புரியும்.