ஜாக்டோ ஜியா ஆசிரியைகள் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்களா?

பாஜக மகளிரணியைச் சேர்ந்த மயிலை ரமா என்பவர் ஜாக்டோ ஜியா அமைப்பைச் சேர்ந்த ஆசிரியைகள் திமுகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்கிறார்கள் என்ற கருத்துடன் சில பெண்கள் இரு சக்கர வாகனம், திமுக கொடியோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து “தேர்தலுக்கு அப்புறமும் எடப்பாடி தான் முதல்வர், இப்படி அவசரபட்டுட்டிங்களே டி…. பொட்டி படுக்கையை கட்டி வச்சிக்கிட்டு ரெடியா இருங்க மா..பெரிய ஆப்பு ரெடி கண்ணூங்களா!” என்று கூறி இருக்கிறார்.

மெய்ப்பொருள்:

மயிலை ரமா பகிர்ந்திருக்கும் புகைப்படம் 2018 திமுக மகளிரணி வாகனப் பேரணியில் எடுக்கப்பட்டது. இவர்கள் ஜாக்டோ ஜியா ஆசிரியைகள் கிடையாது.

உண்மையான புகைப்படம்:

ஈரோடு மண்டல திமுக மாநாடு பெருந்துறையில் 2018 மார்ச் 24, 25-ம் தேதிகளில் நடந்தது. அதன் ஒரு பகுதியாக அதற்கு முன்னர் நடந்த மகளிரணி விழிப்புணர்வு வாகனப் பேரணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஜாக்டோ ஜியா ஆசிரியைகள் என்று பொய்யாகப் பகிர்ந்திருக்கிறார் மயிலை ரமா.

Source: 

ஈரோடு மகளிர் இருசக்கர வாகன பேரணி.திமுக இளைஞரணி ஸ்ரீவை .பிரபா

ஈரோடு மண்டல திமுக மாநாடு : பந்தல் நிறையக் கூட்டம், உற்சாகத்தில் ஸ்டாலின்