இந்திரா காந்தி இஸ்லாத்திற்கு மாறினாரா? பெரோஷ் கான் என்பதுதான் அவரின் கணவரின் பெயரா?

இந்திரா காந்தி பெரொஷ் கானை லண்டனில் உள்ள ஒரு மசூதியில் இஸ்லாத்திற்கு மதம் மாறி திருமணம் செய்து கொண்டதாகவும், அதன் பின்னர் மகாத்மா காந்தி அவர்கள் காந்தி என்ற குடும்பப்பெயரை அரசியல் எதிர்காலத்திற்காகக் கொடுத்து உதவியதாக ஒரு பதிவு பகிரப்பட்டு வருகிறது.

மெய்ப்பொருள்:

இந்திரா காந்தியின் கணவர் பெயர் பெரோஷ் கான் என்பது பல ஆண்டுகளாகவே பரப்பப்படும் ஒரு பொய்யாகும். அதே போல மேலே படத்தில் பகிரப்பட்டிருக்கும் எதுவுமே உண்மையில்லை.

இந்திரா காந்தியின் கணவர் பெயர் பெரோஷ் காந்தி (முழுப்பெயர்: Feroze Jehangir Ghandy). இவர் பார்சி இனத்தைச் சேர்ந்தவர், முஸ்லீம் அல்ல. பார்சி இனத்தவர் இரானிலிருந்து வந்தவர்கள் என்பதால் முஸ்லீம் பெயர்களோடு பார்சி பெயர்கள் ஒத்திருக்கும். இவரது தந்தையின் பெயர் ஜஹான்கீர் காந்தி ஆகும். அவர் Killick Nixon என்ற நிறுவனத்தில் முதலில் கடல்சார் பொறியாளராக இருந்தவர்.

பெரோஷ் காந்தி சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்கும் போது மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்டு தன்னுடைய பெயரை Feroze Gandhi என்று மாற்றிக்கொண்டார். இது நடந்தது இவருக்கும் இந்திரா காந்திக்கும் திருமணம் நடக்கும் முன்பே ஆகும். இந்திராவுக்கும், பெரோஷுக்கும் மார்ச் 26, 1942 இல் இந்து முறைப்படி திருமணம் நடந்தது.

பெரோஷ் காந்தி இறந்து எரியூட்டப்பட்ட பிறகு அவரது சாம்பல் அலகாபாத் நகரில் உள்ள பார்சி இடுகாட்டில் புதைக்கப்பட்டது.

Sources:

A forgotten patriot
Idea Exchange: Opinion Makers, Critical Issues, Interesting Times
Feroze Gandhi’s grave spruced up
Dynasty keeps away from Feroze Gandhi’s neglected tombstone