I’m a Hindu only by accident of birth என்று கூறினாரா நேரு?

இந்தியாவின் முதல் பிரதமரான நேரு “By education I am an Englishman, by views an internationalist, by culture a Muslim and a Hindu only by accident of birth.” எனக் கூறினார் என்று பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

மெய்ப்பொருள்:

இது பற்றி AltNews தளம் 5 நவம்பர் 2018இல் பகிர்ந்துள்ள கட்டுரையில் நேரு இவ்வாறு கூறவில்லை என்பதை நிரூபித்துள்ளார்கள். இதைக் கூறியவர் N.B. Khare என்பவர். இவர் இந்து மகாசபை தலைவராகவும் இருந்துள்ளார்.

AltNews கட்டுரையின் படி, “The Nehrus: Motilal and Jawaharlal” என்று பி.ஆர். நந்தா எழுதிய புத்தகத்தில் இந்த மேற்கோள் வந்துள்ளது. இதன்படி N.B. Khare நேருவைப் பற்றிக் கூறும் போது ‘English by education, Muslim by culture and Hindu by an accident of birth’ என்று குறிப்பிட்டுள்ளார்.

The Nehrus: Motilal and Jawaharlal

Motilal Nehru” என்ற இன்னொரு புத்தகத்திலும் இதே மேற்கோளை ஒருவர் நேருவை இப்படிக் கூறினார் என்று குறிப்பிட்டுள்ளார் நந்தா. மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேருவின் தந்தை என்பது நாம் அனைவரும் அறிந்தது.

அதற்குப் பிறகு இதே மேற்கோளை சசி தரூர், நேருவைப் பற்றி N.B. Khare இவ்வாறு கூறினார் என்று அவரின் “Nehru: The Invention of India” என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தி எப்போதிலிருந்து பகிரப்பட்டு வருகிறது?

AltNews தளத்தின் அதே கட்டுரையில் இந்த மேற்கோளை நேரு கூறினார் என்று எப்போது முதலில் பரப்பப்பட்டது என்பதையும் கண்டுபிடித்து உள்ளார்கள். பிரபல அரசியல் பிரமுகர்கள் நேருவைப் பற்றிக் கூறிய கருத்துக்களைத் தொகுத்து 1959இல் Rafiq Zakaria என்பவர் வெளியிட்ட “A Study of Nehru” என்ற புத்தகத்தில் N.B. Khare எழுதியிருக்கும் ‘The Angry Aristocrat’ என்ற கட்டுரையில்  (பக்கம் 215) நேருவே தான் ‘English by education, Muslim by culture and Hindu by an accident of birth’ என்று அவரின் சுயசரிதையில் கூறி இருப்பதாக எழுதி இருக்கிறார். ஆனால் நேருவின் சுயசரிதையில் அவ்வாறு எங்குமே அவர் குறிப்பிடவில்லை என்பது தான் உண்மை.

A Study Of Nehru – Rafiq Zakaria

இதிலிருந்தே தெரிகிறது இப்படியொரு கருத்தை நேரு கூறவில்லை அதைக் கூறியவர் இந்து மகாசபை தலைவராக இருந்த N.B. Khare தான் என்று.

Source:

Did Jawaharlal Nehru ever say “I am English by education, Muslim by culture and Hindu by accident”?

Related Posts