ஹர்திக் பட்டேலை அறைந்தவர் ராகுல் காந்தி ஆதரவாளரா?

குஜராத் காங்கிரஸ் தலைவர் ஹர்திக் பட்டேல் பரப்புரையில் இருக்கும் போது மேடையிலேயே ஒருவர் அவரை அறைந்தார். சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டும் இந்த விஷயத்தைச் செய்தவர் ராகுல் காந்தி ஆதரவாளர் எனச் சிலர் பகிர்ந்து வருகின்றனர்.

மெய்ப்பொருள்:

ஹர்திக் பட்டேலை அறைந்தவர் ராகுல் காந்தியுடன் இருப்பவரோ, ஆதரவாளரோ கிடையாது.

படத்தில் ராகுல் காந்தியுடன் இருப்பவரின் பெயர் அனுராக் நாராயண் சிங். உத்திர பிரதேச காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான இவர் முன்னால் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இந்த புகைப்படம் 2016 செப்டம்பரில் எடுக்கப்பட்டது ஆகும்.

ஹர்திக் பட்டேலை அறைந்தவர் பெயர் தருண் கஜ்ஜார். இவருக்கும் அனுராக் நாராயண் சிங்கிற்கும் ஒரே மாதிரியான அமைப்பில் தாடி உள்ளதால் இருவரும் ஒருவரே என்று பகிர்ந்து வருகின்றனர். தருண் கஜ்ஜார் தான் ஏன் ஹர்திக்கை அறைந்தேன் என்று பேட்டியும் கூட கொடுத்துள்ளார்.

தருண் கஜ்ஜார் மற்றும் அனுராக் நாராயண் சிங்கின் புகைப்படங்களைக் கீழே காணலாம்.

Source:

Watch photos: Rahul Gandhi Kisan Yatra gets big turnout at Allahabad

Anugrah Narayan Singh INC