#GoBackModi பாகிஸ்தானில் இருந்து ட்ரெண்ட் ஆகிறதா?

பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம் #GoBackModi என்று ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த சூழ்நிலையில் இவ்வாறு பாகிஸ்தானில் இருந்து தான் ட்ரெண்ட் செய்யப்படுகிறது. அதிலும் உருது, சோமாலி மொழிகளில் எல்லாம் #GoBackModi ட்ரெண்ட் ஆகிறது என தினத்தந்தி, துக்ளக் ஆகிய இரண்டு பத்திரிக்கைகளும் செய்தி வெளியிட்டன. இந்த செய்தி சமூக வலைதளங்களில் கூட பரவி வருகிறது.

மெய்ப்பொருள்:

தினத்தந்தி மற்றும் துக்ளக்கில் வந்துள்ளது பொய்யான செய்தி ஆகும்.

துக்ளக் பத்திரிக்கை துணுக்கில் குறிப்பிடப்பட்டுள்ள ரங்கநாதன் அவர்களின் குறிப்பிட்ட ட்வீட்டை நாம் சோதித்து பார்த்த போது அவர் #GoBackModi என்பதற்கு பதிலாக #GoBackModii என்பதை எடுத்து trendsmap.com தளத்தில் சோதித்து அதிலிருந்து ஸ்கீரின்சாட்களை பகிர்ந்துள்ளார்.

#GoBackModii என்றும் மார்ச் 1, 2019 அன்று ட்வீட் செய்துள்ளனர் சில 100/1000 பேர். ஆனால் எண்ணிக்கை அளவில் இது #GoBackModi என்பதை விட மிகக்குறைவு. யாரோ ஒருவர் தவறுதலாக அல்லது வேண்டுமென்றே ஒரு எழுத்தை கூடுதலாக சேர்த்து ட்வீட் செய்ய அவரை தொடரும் அல்லது அதை பார்த்த மற்றவர்களும் இதை ட்வீட் செய்துள்ளனர். இந்த #GoBackModii என்கிற ட்வீட்டை பாகிஸ்தானில் இருந்தும், உருது உட்பட வேறு மொழிகளிலும் ட்வீட் செய்துள்ளனர். ஆனாலும் ட்ரெண்டிங்கில் வந்தது தமிழ்நாட்டில் இருந்து ட்வீட் செய்யப்பட்ட #GoBackModi என்பது தான். இந்த முறையில் தான் பெரும்பாலானவர்கள் தமிழிலும் ட்வீட் செய்துள்ளனர்.

கீழே உள்ள இணைப்புகளில் இரண்டிலும் மார்ச் 1 ஆம் தேதி எத்தனை பேர் ட்வீட் செய்துள்ளார்கள் என்று பார்க்கலாம்.

    1. #GoBackModii – ரங்கநாதன் சோதித்த ட்வீட்.
    2. #GoBackModiஉலக அளவில் ட்ரெண்ட் ஆன ட்வீட். இதை தமிழில் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் ட்வீட் செய்துள்ளனர். இதே இணைப்பில் இடது பக்கம் உள்ள Search filters என்பதில் குறிப்பிட்ட மொழியை தேர்வு செய்தால் அதையும் பார்க்கலாம். தமிழில் மட்டும் செய்யப்ப்ட்ட ட்வீட்டுகள் இங்கே

ரங்கநாதனின் மற்ற ட்வீட்களில் கூட அவர் #GoBackModi என்பதைத்தான் trendsmap.com தளத்தில் தேடி இருக்கிறார் என்பதை நிரூபிக்க எந்த ஸ்க்ரீன்சாட்டையும் பகிரவில்லை. trendsmap.com தளத்தில் Analytics பகுதியில் அதையும் கூட நம்மால் பார்க்க முடியும்.

உதாரணமாக இன்று (06-03-2019) ட்ரெண்டிங்கில் வந்த #GoBackSadistModi என்கிற ட்வீட் தமிழில் எத்தனை பேர் ட்வீட், ரீ-ட்வீட் செய்துள்ளார்கள் என்று கீழே காணலாம்.

எல்லா மொழிகளிலும்:

நாடு, நகரம். மொழி:

இன்றும் கூட #gobackmodii என்று ட்வீட் செய்துள்ளனர்.

இன்று #gobackmodii என்று ட்வீட் செய்தவர்களின் எண்ணிக்கை:

இன்று ட்ரெண்ட் ஆகியுள்ள #gobackmodii என்பதில் 3 சதவீதம் பாகிஸ்தானில் இருந்தும் ஆங்கிலம், சோமாலி, இந்தி மொழிகளில் ட்வீட் செய்யப்பட்டுள்ளது. அதேபோல டிவிட்டரில் சோமாலி மொழியை தேடும் வசதி இல்லை. TrendsMap தளத்தில் மொழி குறித்த Analytics துல்லியமானதாக இல்லை. #gobackmodii என்பதை TrendsMap சோமாலி மொழியில் தேடிய பொழுது நமக்கு கிடைத்து தமிழ் மற்றும் ஆங்கில ட்வீட்டுகளே. இதனாலேயே ரங்கநாதனுக்கும் மார்ச் 1 அன்று #gobackmodii என்பது சோமாலி மொழியில் ட்வீட் செய்யப்பட்டுள்ளதாக காண்பித்துள்ளது TrendsMap தளம்.

ஆகவே இதுவரை மோடி வரும்போதெல்லாம் #GoBackModi (அல்லது #GoBackSadistModi ) என்று ட்ரெண்ட் ஆனது தமிழகத்தில் இருந்து தான். இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்தும் கூட இவை ட்வீட் செய்யப்பட்டுள்ளன.

மேலும் தகவல்களுக்கு:

ரங்கநாதனின் முழு ட்வீட்

#GoBackSadistModi – மார்ச் 6 தகவல்கள்

#GoBackModii – மார்ச் 6 தகவல்கள்

Related Posts