இந்தியரும் பாகிஸ்தானியரும் இணைந்து மோடிக்கு நன்றி தெரிவித்தார்களா?

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் இந்தியாவிடம் நாளை (01-03-2019) ஒப்படைக்கப்படுவார் என்று அறிவித்துள்ள நிலையில் மோடி மூன்றாம் உலகப்போரைத் தவிர்த்தார், அதற்கு உலகமெங்கும் மக்கள் புகழாரம் என்று கூறி இந்தியர் ஒருவரும், பாகிஸ்தானியர் ஒருவரும் “I Love Modiji” என்று எழுதிய பேப்பர் ஒன்றை கையில் வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது.

மெய்ப்பொருள்:

இது 2015 ஆம் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும். அத்தோடு இது மோடிக்கு நன்றி கூறி எடுக்கப்பட்ட புகைப்படமும் இல்லை. கீழே உள்ளது தான் உண்மையான புகைப்படம்.

2015 ஆம் ஆண்டில் சிவசேனா மும்பையில் பாகிஸ்தானிய கலைஞர்களை எதிர்த்த போது திரைப்பட துறையை சேர்ந்த ராம் சுப்ரமணியன் என்பவர் தொடங்கி பாகிஸ்தான்/இந்தியாவை நான் வெறுக்கவில்லை என்று இரு நாட்டவரும் இது மாதிரி வாசகங்களுடன் புகைப்படங்களை பகிர்ந்தனர்.

Source

When Thousands of Indians and Pakistanis Changed Their Profile Pictures for a Special Reason