ஓட்டு போட தமிழ்நாடு வந்தாரா சுந்தர் பிச்சை?

இன்று தமிழகத்தில் தேர்தல் நடக்கும் சூழ்நிலையில் கூகுள் CEO வாக்களிக்க அமெரிக்காவிலிருந்து தமிழ்நாடு வந்ததாக ஒரு செய்தி பரவி வருகிறது.

மெய்ப்பொருள்:

சுந்தர் பிச்சை வாக்களிக்கத் தமிழகம் வந்தார் என்பது பொய்யான தகவலாகும்.

பகிரப்பட்டிருக்கும் புகைப்படம் சுந்தர் பிச்சை 2017 ஜனவரியில் இந்தியா வந்திருந்த போது மேற்கு வங்கத்தில் உள்ள காரக்பூரில் அவர் படித்த ஐஐடி கல்லூரியில் எடுத்த புகைப்படம் ஆகும். இதை அவர் அப்போதே டிவிட்டரிலும் பகிர்ந்திருக்கிறார்.

இதற்கும் மேலாகச் சுந்தர் பிச்சையால் இந்தியத் தேர்தல்களில் வாக்களிக்கவும் இயலாது. காரணம் இந்தியக் குடியுரிமை சட்டத்தின் படி இன்னொரு நாட்டின் குடிமகனாக ஒருவர் ஆகிவிட்டால் அவர் இந்தியக் குடிமகன் கிடையாது. சுந்தர் பிச்சை தற்போது அமெரிக்கக் குடிமகன் ஆவார்.