போதை பொருட்களுடன் அமெரிக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டாரா ராகுல் காந்தி?

2001ஆம் ஆண்டு அமெரிக்காவில் பாஸ்டன் நகர் ஏர்போர்ட்டில் FBI யால், 1,60,000 டாலர்களுடனும் தடைசெய்யப்பட்ட போதை மருந்துகளுடனும் தன்னுடன் அழைத்து வந்த கொலம்பிய நாட்டு போதை மாபியா கும்பல் தலைவனின் மகளுடன் கைது செய்யப்பட்டார் ராகுல் காந்தி. பின்னர் வாஜ்பாய் உதவியால் அவர் விடுவிக்கப்பட்டார் என்று பிஜேபி ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

மெய்ப்பொருள்:

இந்து இணையதளத்தில் வந்துள்ள செய்தியின் படி,  2001 செப்டம்பர் மாதம் பாஸ்டன் விமான நிலையத்தில் வாஷிங்டன் செல்லவிருந்த ராகுல் காந்தியை FBI அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.  இதற்கு மிக முக்கியமான காரணம் அதற்கு சில நாட்களுக்கு முன்புதான் அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நிகழ்ந்திருந்தது.

ராகுல் காந்தி முன்னாள் பிரதமரின் மகன் என்பதால் அவர் SPG(Special Protection Group) பாதுகாப்பில் இருப்பவர் ஆவார். இதனால் அவர் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்கள் முன்கூட்டியே குறிப்பிட்ட நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அமைப்பிற்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும். இதில் ஏற்பட்ட கவனக்குறைவால்/ராகுல் காந்தியின் இந்த பயணம் குறித்துத் தெரியாததால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கலாம். இதே போன்ற நிகழ்வுகள் அதற்குப் பிறகு ஷாருக்கான், அப்துல் கலாம் ஆகியோருக்கும் நிகழ்ந்துள்ளது.

இதை முதலில் சுப்பிரமணியன் சுவாமி ஜூலை 2015இல் கூறி இருக்கிறார். ஆனால் இது குறித்து எந்த ஆதாரத்தையும் இதுவரை அவர் வெளியிடவில்லை.

Source:

Was Rahul Gandhi detained by FBI?