வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆன்லைன் மூலம் ஓட்டு போடும் வசதியா?

பொதுத்தேர்தல் வரவிருக்கும் சமயத்தில் WhatsAppஇல் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு தேர்தல் ஆணையம் ஆன்லைன் மூலம் வாக்களிக்கும் வசதியை உருவாக்கி உள்ளதாக செய்தி பரப்பப்பட்டு வருகிறது. அது உண்மையா?

செய்தி:

மெய்ப்பொருள்:

இது மாதிரி எந்த வசதியையும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. இந்த செய்தி உண்மையல்ல என்று மறுத்திருக்கும் தேர்தல் ஆணையம் இந்த பொய்ச்செய்தி குறித்து புகாரும் அளித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணைய செய்திதொடர்பாளர் Sheyphali Sharan செய்திருக்கும் ட்வீட். வெளிநாட்டில் உள்ளவர்கள் nvsp.in தளத்தில் Form 6A மூலம் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

Source:

Election Commission Has Just Busted ‘Fake Claims’ About Online Voting For NRIs