இஸ்ரேல் பிரதமருக்கு எழுந்து நின்று மரியாதை கொடுக்கவில்லையா இம்ரான் கான்?

கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்ற 19ஆவது Shanghai Cooperation Organization உச்சி மாநாட்டில் இஸ்ரேல் பிரதமர் வரும் போது அனைத்து நாட்டுப் பிரதமர்களும் எழுந்து நின்ற போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எழுந்து நிற்கவில்லை என்று ஒரு செய்தி பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது.

மெய்ப்பொருள்:

இது பொய்யான செய்தியாகும்.

கிர்கிஸ்தானில் நடைபெற்ற 2019ஆம் ஆண்டு SCO உச்சி மாநாட்டில் இம்ரான் கானுக்கு பிறகு வருவது ரஷ்ய அதிபர் புதின். அதற்குப் பின்னர் உஸ்பெகிஸ்தான், பெலாரஸ், மங்கோலிய நாட்டுத் தலைவர்கள் தான் வருகின்றனர். இதைக் கீழே உள்ள வீடியோவில் காணலாம்.

Shanghai Cooperation Organisation அமைப்பில் இஸ்ரேல் தற்போது உறுப்பினராகக் கூட இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.