ஓட்டுக்குத் தன் கையாலேயே பணம் கொடுத்தாரா முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி? [வீடியோ]

தேர்தல் பிரச்சாரத்தின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு கடையில் இருக்கும் பெண் ஒருவரிடம் பணம் கொடுப்பது போல ஒரு காணொளி பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

மெய்ப்பொருள்:

பிரச்சாரத்தின் போது EPS அவர்கள் பணம் கொடுப்பது போலப் பகிரப்படும் காணொளி போலியானதாகும்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது வாழைப் பழக்கடையில் இருக்கும் ஒரு பெண்ணிடம் வாக்கு கேட்கிறார் முதலமைச்சர், அப்போது கடைக்கார பெண்மணியான அவர் ஒரு சீப்பு வாழைப்பழத்தை அவருக்கு அன்பளிப்பாக வழங்குகிறார். அதற்குப் பிறகு அதற்குண்டான பணத்தை பின்னால் இருப்பவரிடம் வாங்கி இவர் கொடுக்கிறார். இதை முதலமைச்சரே ஓட்டுக்காகப் பணம் கொடுத்துவிட்டார் என்கிற ரீதியில் காணொளியை எடிட் செய்து பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

முழு காணொளியை கீழே காணலாம்.