நாட்டின் பொருளாதார வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறதென கூறினாரா சிதம்பரம்?

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு மாதந்தோறும் ரூ.6000 வழங்கப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ள நிலையில் நாட்டில் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வருவதால் இந்த திட்டத்தைச் செயல்படுத்துவது சாத்தியம் தான் என்று சிதம்பரம் கூறினார் என பா.ஜ.க ஆதரவாளர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

மெய்ப்பொருள்:

நாட்டின் பொருளாதார வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது என்று சிதம்பரம் குறிப்பிட்டது 2004 முதல் 2014 வரை ஆகும். அவர் கூறியது கீழே.

2004 – 2014 ஆகிய பத்தாண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்திருக்கிறது.

அவர் பேசிய வீடியோ:

இதில் 9.40 நிமிடத்தில் மேலே உள்ளதைக் கூறியிருக்கிறார்.

சிதம்பரம் 2004-2014இல் பொருளாதார வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது என்று கூறியதில் வருடத்தை நீக்கிவிட்டு தற்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சி அபரிதமாக இருக்கிறது என்று அவர் கூறியதாக பகிர்ந்து வருகின்றனர்.

இதே செய்தி News 18 தமிழ்நாடு, தினமலர் ஆகியவற்றிலும் வந்திருக்கிறது.

Sources:

ஏழைகளுக்கு மாதந்தோறும் ரூ.6000 வழங்கும் திட்டம்

ஏழை குடும்பத்திற்கு ரூ.72 ஆயிரம் இனாம்