காதலர் தினத்தன்று தூக்கிலிடப்பட்டாரா பகத் சிங்?

சமூக வலைதளங்கள், வாட்ஸ்-அப் போன்றவற்றில் சில ஆண்டுகளாக பரவி வரும் ஒரு செய்தி பகத் சிங் காதலர் தினத்தன்று தூக்கிலிடப்ப்ட்டார் என்பது. “பிப்ரவரி 14 என்றதும் எல்லோருக்கும் முதலில் நினைவில் வருவது காதலர் தினம் மட்டுமே. நம்முள் எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது, மாவீரன் பகத் சிங்சிங் தூக்கிலிடப்பட்ட நாள் என்று. பிப்ரவரி 14, 1931.” என்று பகிரப்படுகிறது இந்த செய்தி.

மெய்ப்பொருள்:

பகத் சிங் தூக்கிலிடப்பட்ட தேதி 23 மார்ச் 1931 ஆகும். 8 ஏப்ரல் 1929 ஆம் தேதியன்று டெல்லி மத்திய சட்டமன்றத்தில் குண்டு வீசிய பிறகு பதுகேஷ்வர் தத் என்பவருடன் சேர்த்து கைது செய்யப்பட்டார். அந்த சமயத்தில் ஜான் சாண்டர்ஸ் என்ற ஆங்கிலேயே அதிகாரியை சுட்டுகொன்றதாக பகத் சிங் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அந்த வழக்கில் விசாரணைக்கு பிறகு அக்டோபர் 7, 1930 அன்று பகத் சிங், சுக்தேவ் மற்றும் ராஜ குரு ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவரது மரணத்திற்கும் பிப்ரவரி 14க்கும் எந்த தொடர்புமே இல்லையென்பது தான் உண்மை.

Source:

Valentine’s Day Fact Check: No, Bhagat Singh wasn’t hanged on February 14

Bhagat Singh