பாஜகவிற்கு ஆதரவாக வாக்கு கேட்டாரா அபிநந்தன்?

அபிநந்தன் தோற்றத்தில் ஒருவர் பாஜகவிற்கு ஆதரவாக அதன் கொடி மற்றும் சின்னத்துடன் இருக்கும் புகைப்படத்துடன் “இவர் யாருன்னு தெரியுதா இவர் தான் இந்திய விமானி அபிநந்தன் இது எல்லாமே ஒரு நாடகம் புரியுதா மக்களே!!” என்று பகிர்ந்து வருகின்றனர் சிலர்.

மெய்ப்பொருள்:

இவர் அபிநந்தன் கிடையாது.

அபிநந்தன் போன்ற தோற்றத்தில் உள்ள ஒருவரின் புகைப்படம் ஆகும். அபிநந்தனுக்கும் புகைப்படத்தில் இருப்பவருக்கும் இருக்கும் வித்தியாசத்தைக் கீழே இருக்கும் படத்தில் காணலாம்.

அத்தோடு அபிநந்தன் மார்ச் 27ஆம் தேதியே இந்தியக் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரில் பணிக்குச் சேர்ந்துவிட்டார். இந்த புகைப்படம் சமீபத்தில் தான் பகிரப்பட்டு வருகிறது. அவர் இப்போதும் இந்திய விமானப் படையில் பணியாற்றுவதால் இந்திய விமானப் படை சட்டம் 1960-ன் படி விமானப் படையில் பணியாற்றுகிறவர்களுக்கு அரசியல் கட்சிகளில் சேர அனுமதியில்லை என்பதால் அவரால் பாஜக ஆதரவாகப் பிரச்சாரம் செய்யவும் முடியாது.

Sources:

அபிநந்தன் பாஜக-வுக்கு வாக்களிக்க சொன்னதாக காட்டும் பதிவு உண்மையா? #BBCFactCheck

No, This Is Not A Photo Of Abhinandan Varthaman After Casting His Vote