காங்கிரஸ் ஆட்சி நடந்திருந்தால் அபிநந்தனை எரித்திருப்பேன் என்றாரா இம்ரான் கான்?

இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்திருந்தால் அபிநந்தனை அங்கேயே எரித்திருப்பேன் என்று  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியதாக “திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க.” என்ற பேஸ்புக் பக்கம் ஏப்ரல் 02, 2019இல் பகிர்ந்துள்ளது. அதை ஒரு சிலர் பகிர்ந்தும் வருகின்றனர்.

மெய்ப்பொருள்:

அபிநந்தனை விடுவிப்பது குறித்து பாராளுமன்றத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ‘அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் நாளை(மார்ச் 01, 2019) விடுவிக்கப்படுவார்’ என்று பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் கூறினார்.

இம்ரான் கான், அபிநந்தன் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து இன்று வரையிலும் எங்குமே திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க. பேஸ்புக் பக்கம் பகிர்ந்துள்ளது போலப் பேசவில்லை.

ஆனால் அபிநந்தன் விடுதலையாகி ஒரு மாதம் ஆன பிறகும் கூட இந்த பொய் செய்தி பரப்பப்பட்டு வருகிறது.

Sources:

IAF Wing Commander Abhinandan to be released on Friday: Pak PM Imran Khan | The News Minute