அபிநந்தன் கூறியதாக பரவும் போலி தன்னிலை விளக்க அறிக்கை

பாகிஸ்தான் ராணுவத்திடம் மாட்டி அவர்களால் இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்ட விங் கமாண்டர் அபிநந்தன் அங்கே இருந்த போது என்ன நடந்தது என்று கூறியதாக ஒரு அறிக்கை ஒன்று பேஸ்புக்கில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

மெய்ப்பொருள்:

அபிநந்தன் தரப்பில் இருந்தோ அல்லது இந்திய அரசின் தரப்பில் இருந்தோ எந்த அறிக்கையுமே அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

இதில் கடைசியாக தமிழாக்கம் K Rangan என்று இருப்பதால் அந்த பெயரில் இருக்கும் பேஸ்புக் பக்கங்களை தேடிய போது நமக்கு கிடைத்தது கீழே உள்ள பதிவு. இவரது பதிவுகள் பெரும்பாலும் இந்துத்துவா, பிஜேபிக்கு ஆதரவாகவே இருக்கிறது.