இஸ்ரேல் பிரதமருக்கு எழுந்து நின்று மரியாதை கொடுக்கவில்லையா இம்ரான் கான்?

கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்ற 19ஆவது Shanghai Cooperation Organization உச்சி மாநாட்டில் இஸ்ரேல் பிரதமர் வரும் போது அனைத்து நாட்டுப் பிரதமர்களும் எழுந்து நின்ற போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எழுந்து நிற்கவில்லை என்று ஒரு செய்தி பேஸ்புக்கில் …

ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுத்ததால் இறந்தார் என்று பேஸ்புக்கில் பொய்யாகப் பரவும் புகைப்படம்

ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுத்த நிலப்பரப்புதான் என்ற வாக்கியத்துடன் வெளிநாட்டு மனிதர் ஒருவர் புகைப்படம் பேஸ்புக்கில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

ஐஏஎஸ் வெற்றியாளர், ஏழை கைரிக்‌ஷா தந்தை என பொய்யாக பரவும் செய்தி

கொல்கத்தாவைச் சேர்ந்த பெண் ஒருவர் கைரிக்‌ஷா இழுத்து தன்னை படிக்க வைத்த தந்தையை உலகுக்கு அறிமுகப்படுத்த அதே ரிக்‌ஷாவில் வைத்து அழைத்துச் சென்றதாக ஒரு செய்தி சில ஆண்டுகளாகவே சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மெய்ப்பொருள்: இது பொய்யான செய்தியாகும். …

இந்திரா காந்தி இஸ்லாத்திற்கு மாறினாரா? பெரோஷ் கான் என்பதுதான் அவரின் கணவரின் பெயரா?

இந்திரா காந்தி பெரொஷ் கானை லண்டனில் உள்ள ஒரு மசூதியில் இஸ்லாத்திற்கு மதம் மாறி திருமணம் செய்து கொண்டதாகவும், அதன் பின்னர் மகாத்மா காந்தி அவர்கள் காந்தி என்ற குடும்பப்பெயரை அரசியல் எதிர்காலத்திற்காகக் கொடுத்து உதவியதாக ஒரு பதிவு பகிரப்பட்டு …

ஹர்திக் பட்டேலை அறைந்தவர் ராகுல் காந்தி ஆதரவாளரா?

குஜராத் காங்கிரஸ் தலைவர் ஹர்திக் பட்டேல் பரப்புரையில் இருக்கும் போது மேடையிலேயே ஒருவர் அவரை அறைந்தார். சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டும் இந்த விஷயத்தைச் செய்தவர் ராகுல் காந்தி ஆதரவாளர் எனச் சிலர் பகிர்ந்து வருகின்றனர். மெய்ப்பொருள்: ஹர்திக் பட்டேலை அறைந்தவர் ராகுல் காந்தியுடன் இருப்பவரோ, ஆதரவாளரோ கிடையாது. படத்தில் ராகுல் காந்தியுடன் இருப்பவரின் பெயர் அனுராக் நாராயண் சிங். உத்திர பிரதேச காங்கிரஸ் …

ஓட்டு போட தமிழ்நாடு வந்தாரா சுந்தர் பிச்சை?

இன்று தமிழகத்தில் தேர்தல் நடக்கும் சூழ்நிலையில் கூகுள் CEO வாக்களிக்க அமெரிக்காவிலிருந்து தமிழ்நாடு வந்ததாக ஒரு செய்தி பரவி வருகிறது. மெய்ப்பொருள்: சுந்தர் பிச்சை வாக்களிக்கத் தமிழகம் வந்தார் என்பது பொய்யான தகவலாகும். பகிரப்பட்டிருக்கும் புகைப்படம் சுந்தர் பிச்சை 2017 ஜனவரியில் இந்தியா வந்திருந்த போது …

ஓட்டுக்குத் தன் கையாலேயே பணம் கொடுத்தாரா முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி? [வீடியோ]

தேர்தல் பிரச்சாரத்தின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு கடையில் இருக்கும் பெண் ஒருவரிடம் பணம் கொடுப்பது போல ஒரு காணொளி பலராலும் பகிரப்பட்டு வருகிறது. மெய்ப்பொருள்: பிரச்சாரத்தின் போது EPS அவர்கள் பணம் கொடுப்பது போலப் பகிரப்படும் காணொளி …

பாஜகவிற்கு ஆதரவாக வாக்கு கேட்டாரா அபிநந்தன்?

அபிநந்தன் தோற்றத்தில் ஒருவர் பாஜகவிற்கு ஆதரவாக அதன் கொடி மற்றும் சின்னத்துடன் இருக்கும் புகைப்படத்துடன் “இவர் யாருன்னு தெரியுதா இவர் தான் இந்திய விமானி அபிநந்தன் இது எல்லாமே ஒரு நாடகம் புரியுதா மக்களே!!” என்று பகிர்ந்து வருகின்றனர் சிலர். …

ஜாக்டோ ஜியா ஆசிரியைகள் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்களா?

பாஜக மகளிரணியைச் சேர்ந்த மயிலை ரமா என்பவர் ஜாக்டோ ஜியா அமைப்பைச் சேர்ந்த ஆசிரியைகள் திமுகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்கிறார்கள் என்ற கருத்துடன் சில பெண்கள் இரு சக்கர வாகனம், திமுக கொடியோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து “தேர்தலுக்கு அப்புறமும் எடப்பாடி தான் முதல்வர், இப்படி அவசரபட்டுட்டிங்களே டி…. பொட்டி படுக்கையை கட்டி வச்சிக்கிட்டு ரெடியா இருங்க மா..பெரிய ஆப்பு ரெடி கண்ணூங்களா!” என்று கூறி இருக்கிறார். மெய்ப்பொருள்: …

நியூசிலாந்து மசூதி தாக்குதல் குற்றவாளியை மற்ற சிறை கைதிகள் தாக்கினார்களா?

நியூசிலாந்து பள்ளிவாசலில் தொழுகையின் போது சுட்டுக் கொன்றவனை ஜெயிலில் உள்ள சக கைதிகளே துவைத்து எடுக்கும் அற்புத காட்சி.! என்று ஒரு காணொளி பேஸ்புக்கில் Mohamed Arshath என்ற நபரால் அப்லோட் செய்யப்பட்டு பலராலும் பகிரப்பட்டு வருகிறது. மெய்ப்பொருள்: காணொளியில் கைதிகளால் தாக்கப்படும் நபர் நியூசிலாந்து மசூதி தாக்குதல் குற்றவாளி அல்ல. நியூசிலாந்து …